சட்ட விஞ்ஞான சந்தேகத்திற்கிடமான ஆவண பிரிவானது சட்ட நீதிமன்றங்கள், பொலிஸ், தொழிலாளர் நியாயமன்று மற்றும் வேறு அரசாங்க திணைக்களங்கள், நியதிச்சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமிருந்தும் பரிசோதனைக்காகவும் அறிக்கையிடலுக்காகவும் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறது. தனிப்பட்ட திறத்தினர் ஒரு சட்டத்தரணியடாக ஆவணங்களைச் சமர்ப்பித்தால் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களுக்கான அரசாங்க பரிசோதகரிடமிருந்து ஒரு நிபுணத்துவ அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சட்ட விஞ்ஞான சந்தேகத்திற்கிடமான ஆவண பிரிவின் நடவடிக்கைகள்
- எல்லா விதமான சட்ட விஞ்ஞான ஆவணங்களையும் பரிசோதித்தல்.
- கையெழுத்துக்களையும் கையொப்பங்களையும் இனங்காணலும் மோசடியைக் கண்டறிதலும்.
- அச்சிடப்பட்ட மூலப் பத்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள், அச்சிடப்பட்ட எழுத்துருவங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட அடையாளங்கள் முதலியவற்றைப் பரிசோதித்தல்.
- திருத்தங்கள், துடைத்தழிக்கப்பட்ட தடங்கள், தடயங்கள், சேர்க்கைகள், பிரதியீடுகள் முதலியவற்றைக் கண்டுபிடித்தல்.
- பயண ஆவணங்களைப் பரிசோதித்தல்.
- கீறல்களின் தொடர் வரிசையைப் பரிசோதித்தல்.
- மை, கடதாசி, ஒட்டும் தன்மையான பதார்த்தங்களைப் பௌதீக ரீதியில் பரிசோதித்தல்.
- கருகிப்போன ஆவணங்களையும், உருக்குலைந்த ஆவணங்களையும் பரிசோதித்தல்.
- ஆவணங்களின் காலப்பிரிவுடன் தொடர்பான காரியங்களைப் புலனாய்வு செய்தல்.
- போலியான நாணய அலகுகளைப் பரிசோதித்தல்.
- லொத்தர் சீட்டுக்களைப் பரிசோதித்தல்.
- ஒரு ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்ததான எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளல்.
- போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசோதித்தல்.
- அரசிறை முத்திரைகள், தபால் முத்திரைகள் மற்றும் அரசிறையுடன் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் பரிசோதித்தல்.
- நிழற்படியெடுக்கப்பட்ட பிரதிகளைப் பரிசோதித்தலும் நிழற்படியெடுக்கும் கருவிகளை இனங்காணலும்.
- சட்டநீதிமன்றங்களின் நிபுணத்துவ சான்றை வழங்குதல்.
![]() |
![]() |
![]() |