கட்டுரைச் சுட்டு

நஞ்சியல் பிரிவிலுள்ள நிபுணர்கள், சட்ட விஞ்ஞான நோக்கத்திற்காக நஞ்சுகள் மீதான ஒரு பரந்த வீச்சிலான பகுப்பாய்வை மேற்கொள்வர்.

நஞ்சியல் பிரிவின் நடவடிக்கைகள்

  • மருந்துகளை, சயனைட்டு, பீடைநாசினிகள், அமிலங்கள், காபன் மொனோசைட் முதலிய வேறு நஞ்சுகளை இனங்காண்பதற்காக, சந்தேகத்திற்கிடமான மரணங்கள், தீடீர் மரணங்களுக்குட்பட்டவர்களின் பிரேத பரிசோதனையிலிருந்து எடுக்கப்பட்ட, சட்ட விஞ்ஞான அதிகாரிகளினால் சட்டநீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளைப் பகுத்தாய்தல்.
  • மது போதையின் செல்வாக்கின்கீழ் வாகனத்தைச் செலுத்தும் சம்பவங்களிலும் மரணத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்களிலும் மதுபோதைக்காக குருதி, சிறுநீர் மாதிரிகளைப் பகுத்தாய்தல்.
  • போதைவஸ்துக்கள், நஞ்சுகள், அமிலங்கள் என்பன உள்ளனவா என அறிவதற்காக, சட்ட விஞ்ஞான தன்மையிலான சான்றுகளை (மாத்திரைகள், வெற்றுக் கோப்பைகள் போன்றன) பரிசோதித்தலும் இனங்காணலும்.
  • மேற்குறிப்பிட்ட 1,2,3 இல் பரிசோதனையின் பெபேறுகள் மூலம் அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வழங்கல்.
  • நீதிசார் வைத்திய அலுவலர்கள், பொலிஸ் அலுவலர்கள் மற்றும் ஏனைய விசேட புலனாய்வு அதிகாரிகளுக்குப் பயிற்சியும் விரிவுரைகளும் வழங்குதல்.
  • சட்ட நீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்தல்.

 

செய்திகளும் நிகழ்வுகளும்