நீர்ப்பாயவியல் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள் உடலியல் திரவங்களையும் வன்முறையான சட்டவிரோத செயல்களின் தடயங்களாகப் பெறப்பட்ட உடல் திரவ கறைகளையும் பரிசோதித்து பகுத்தாய்வர். நீர்ப்பாயவியல் ரீதியில் சிறப்பான சான்றுகளுள் இரத்தக்கறை படிந்த ஆடைகள், ஆயுதங்களும் விந்துகளின் கறைகளும் உள்ளடங்குகின்றன.

நீர்ப்பாயவியல் பிரிவின் நடவடிக்கைகள்

  • நீர்ப்பாயவியல் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள், அவசியமேற்படுமிடத்து, உடல் திரவ கறைகள், குருதி வகை பகுப்பாய்வினை இனங்காண்பதற்காகவும் நடந்து முடிந்த நிகழ்வினை மீள உருவாக்குவதற்காகவும் குற்றச் செயல் சம்பவம் இடம்பெற்ற இடத்தைச் சென்று பார்வையிடுவர். குத்துச் சம்பவம், தாக்குதல், கற்பழிப்பு, அடித்துவிட்டு ஓடும் சம்பவங்கள் என்பன பொதுவான குற்றச்செயல்வகைகளாகும்.
  • கொலை, கற்பழிப்பு செயல்களுடன் தொடர்புடைய சான்றுகளைப் பரிசோதித்தல்.
  • சார்த்தப்படும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களின் சந்தேகத்திற்கிடமான வாகனங்களைப் பரிசோதித்தல்.
  • நிபுணர்கள் சட்டநீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்வர்.
  • நீதிசார் வைத்திய அலுவலர்கள், பொலிஸ் அலுவலர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய அதிகாரிகளுக்கு விரிவுரைகளை நடாத்துதல்.

செய்திகளும் நிகழ்வுகளும்