பல்லினமான பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள் வேறு எந்தவொரு பிரிவினுள்ளும் சிறப்பாக வகைப்படுத்தப்படமுடியாத ஏனைய எல்லா பௌதீக சான்றுகளையும் பரிசோதிப்பர்.

பல்லின பிரிவின் நடவடிக்கைகள்

  • செம்மையானவையா அல்லது மோசடியானவையா என்பதைத் தீர்மானிப்பதற்காக, சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் அடிச்சட்ட இலக்கங்களையும் பொறியின் இலக்கங்களையும் பரிசோதித்தல்.
  • வெட்டுமரங்களின் திருட்டு சம்பவங்களில், மரக்கட்டையின் அந்தங்களும் துண்டிக்கப்பட்ட மரத்துண்டின் அந்தங்களும் பொருந்துகின்றனவா எனப் பரிசோதித்தல்.
  • களவாடப்பட்ட தொலைதந்தி கம்பிகளின் சம்பவங்களில், சந்தேகத்திற்கிடமான தொலைதந்தி கம்பிகளின் அந்தங்கள், தொலைதந்தியின் தடித்த பகுதியில் எஞ்சியிருக்கும் அந்தங்களுடன் பொருந்துகின்றனவா எனப் பரிசோதித்தல்.
  • கழுத்தை நெரித்து, மூச்குத் திணறடித்து மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவங்கள் போன்றவற்றில் கண்டெடுக்கப்பட்ட கயிற்று நார் அந்தங்கள், சந்தேகத்திற்கிடமான கயிற்று நார் அந்தங்களுடன் பொருந்துகின்றனவா எனப் பரிசோதித்தல்.
  • ஒரு வாகனத்தை அல்லது ஒருவரை இடித்துவிட்டு பின் மறைந்து செல்கின்ற சந்தர்ப்பங்களில், விபத்து நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வண்ணப் பூச்சு சீவல்கள், சந்தேகத்திற்கிடமான வாகனத்தின் வண்ணப் பூச்சுடன் பொருந்துகின்றனவா எனப் பரிசோதித்தல்.
  • சட்ட நீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்தல்.
    பொலிஸ் அலுவலர்களுக்கு குற்றப் புலனாய்வுமீது விரிவுரைகள், சொற்பொலிவுகளை நடாத்துதல்.

செய்திகளும் நிகழ்வுகளும்