எறிபடைத்துறைப் பகுதியிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள் பல்வேறு வகைப்பட்ட துப்பாக்கி வகைகளைப் பரிசோதிப்பதுடன், துப்பாக்கி வகைகள் பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களையும் புலனாய்வு செய்வர். குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வகைகள், துப்பாக்கி வகைகளின் ஆக்கக் கூறுகள், வெடிமருந்து வகைகள், பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து உறைகள், சன்னங்கள் என்பவையே இந்தப் பகுதியில் பரிசோதனை செய்யப்படும் பொதுவான சான்றுகளாகும்.

எறிபடைத்துறை பிரிவின் நடவடிக்கைகள்

  • துப்பாக்கி வகைகள் தொடர்பான ஏனைய ஆக்கக்கூறுகளைப் பரிசோதனை செய்தல். துப்பாக்கி வகைகளினுள் தன்னியக்க குடைதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், சுழல் துப்பாக்கிகள், சுடுதுப்பாக்கிகள், சன்னத்துவக்குகள், வீட்டிலே தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், மீண்டும் மீண்டும் இயங்கும் துப்பாக்கிகள், மறைவாக சுடக்கூடிய குடைத்துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் என்பன உள்ளடங்கும். ஆக்கக் கூறுகளினுள் பலவேறுபட்ட வெடிமருந்துகள், சன்னங்கள், பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து உறைகள், ரவைகள், குளிகைகள், அசையாதிருக்க திணிக்கப்படும் பஞ்சுகள் என்பன உள்ளடங்கும்.
  • மேலதிகமாக, எறிபடைத்துறைப் பிரிவிலுள்ள சட்ட நிபுணர்கள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் குற்ற இடத்தின் புலனாய்வு நடவடிக்கைகளிலும் தமது சேவையை விஸ்தாரப்படுத்துவர்.
  • சட்ட நீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்தல்.
  • சட்ட நீதிசார் வைத்திய அலுவலர்கள், பொலிஸ் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய முகவர் நிலையங்களுக்கு விரிவுரை௧ளை ஆற்றுதல்.
  • பாதுகாப்பு அமைச்சினால் தீர்மானிக்கப்படும் குழுக்கழுக்கு எறிபடைத்துறை சட்ட நிபுணர்கள் அங்கம் வகிப்பார்கள்.
firearms 01 1 firearms 01 2
 
 
 
 

செய்திகளும் நிகழ்வுகளும்