பல்வேறுபட்ட உணவு மாதிரிகள், உணவு பகுப்பாய்வுப் பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பகுத்தாயப்படும்.

உணவு விஞ்ஞானப் பிரிவின் நடவடிக்கைகள்

பகுப்பாய்வு நடவடிக்கைகள்
  • சட்ட நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட சட்ட விரோத மதுபானம், உணவு, மற்றும் ஏனைய உற்பத்திப்பொருட்களைப் பகுத்தாய்ந்து அறிக்கை வெளியிடுதல். அத்தோடு வெளியிடப்பட்ட விஞ்ஞான அறிக்கைகளின் சார்பில் சட்ட நீதிமன்றத்தில் சாட்சிகூறல்.
  • சுகாதாரத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களினால் (MOH, உணவு மேற்பார்வையாளர்கள், PHI, போன்றோர்) ஒப்படைக்கப்பட்ட உணவு மாதிரிகளை (1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ்) பகுத்தாராய்ந்து அறிக்கைகளை வழங்குதல்.
  • உணவை கட்டுப்படுத்தி பரிபாலிக்கும் பகுதி (FCAU) ஏனைய அரசங்க, தனியார் நிறுவனங்களினால் பகுத்தாராய்ந்து உணவுத் தரம் தொடர்பான அறிக்கைகள் வழங்குதல்.
  • சுங்க திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, இலங்கைத் தேயிலை சபை, இலங்கை தரப்படுத்தல் சங்கம் முதலியவற்றால் ஒப்படைக்கப்பட்ட மாதிரிகளைப் பகுத்தாய்ந்து தரம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வழங்குதல்
  • தேசிய சூழல் சட்டத்தின் கீழ் வேறுபட்ட அரசாங்க நிறுவனங்கள், கூட்டுறவுகளுக்காக குடிநீர், தொழிற்சாலைக் கழிவுகளைப் பகுத்தாராய்ந்து, அவற்றின் தரம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வழங்குதல்.
  • வேறுபட்ட ஏனைய அரச, தனியார் நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்ட மதுபானங்களைப் பகுத்தாராய்ந்து, தரம் தொடர்பான அறிக்கைகளை வழங்குதல்.
ஏனைய நடவடிக்கைகள்
  • மருத்துவ அலுவலர்களுக்கு, உணவு, மருந்து பரிசோதகர்களுக்கு, பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மதுவரி அலுவலர்களுக்கு விரிவுரைகள், கள ஆய்வுகளை நடாத்துதல்.
  • உணவு மீதான புதிய ஒழுங்குமுறைகளை வகுப்பதிலும், புதிய கொள்கைகளுக்கான தீர்மானங்களை உருவாக்குவதிலும் உணவு ஆலோசனைக் குழுவின் ஒரு உறுப்பினராக செயல்திறனுடன் பங்குபெறல்.
  • புதிய இலங்கை தரப்படுத்தல்களை உருவாக்குவதற்காக இலங்கை தரப்படுத்தல் சங்கத்தின் வரைஞர் குழுக்களிலும், பிரிவுக் குழுக்களிலும் செயல்திறனுடன் பங்குபெறல்.
  • மத்திய சூழல் அதிகாரசபையினதும், சுற்றாடல், இயற்கை வள அமைச்சினதும் கீழ் வேறுபட்ட குழுக்களின் ஒரு அங்கத்தவராக செயற்படுதல்.

செய்திகளும் நிகழ்வுகளும்