1904ஆம் ஆண்டானது, அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வரலாற்றிலே மிக முக்கியமான ஒரு ஆண்டாக அமைந்தது. 1904ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பேராசிரியர் கே.சீ. பிரவுனிங் என்பவர் முதலாவது அரசாங்க பகுப்பாய்வாளராக நியமிக்கப்பட்டார். 1904ஆம் ஆண்டிற்கு முன்னர், தமது அன்றாட கடமைகளுடன் மேலதிகமாக அரச பகுப்பாய்வாளரின் வேலையும், வைத்திய உத்தியோகத்தர்களினாலே மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த திணைக்களமானது, விஞ்ஞான பாடங்கள் மீதான ஒரு சேவை திணைக்களமாகவே இருந்து வந்துள்ளது. வேலையின் தன்மையும் அளவும் அதிகரிக்க, வசதி கருதி இத்திணைக்களமானது இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

  • உணவு விஞ்ஞானப பிரிவு
  • சட்ட விஞ்ஞானப பிரிவு

1935ஆம் ஆண்டிலே, சட்டத்தில் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களைப் பரிசோதிப்பதற்கான ஒரு புதிய பிரிவானது நிறுவப்பட்டது. அப்பிரிவுக்கு அரசாங்க சந்தேகத்திற்கிடமான ஆவணங்களின் பிரிவு எனப் பெயரிடப்பட்டது.

1913ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் அரசாங்கப் பகுப்பாய்வாளர் தாபனமானது, தனியான ஒரு அரச திணைக்களமாக உருவாக்கப்பட்டமை இங்கு விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது.

1940ஆம் ஆண்டில் இலங்கையரான திரு. டபிள்யு.ஆர். சண்முகம் அவர்கள் முதலாவது அரசாங்கப் பகுப்பாய்வாளராக நியமிக்கப்பட்டார்.

1934ஆம் ஆண்டிலே திணைக்களத்திற்கென, டொரிங்டன் சதுக்கத்திலுள்ள கட்டிடமானது ஒதுக்கப்பட்டது. அத்துடன், 1938ஆம் ஆண்டில் கஞ்சா பிரச்சினை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நிபுணராகவும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் நியமிக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டில் உணவு, மருந்து தொடர்பான சட்டமானது இயற்றப்பட்டது. அத்துடன் அரசாங்கப் பகுப்பாய்வாளர் அங்கீகாரம் பெற்ற பகுப்பாய்வாளராகவும் நியமிக்கப்பட்டார். 1974ஆம் ஆண்டில் மேலதிக அரசாங்கப் பகுப்பாய்வாளர் பதவியானது உருவாக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டிலே நீதித்துறை சார்ந்த அலுவலர்களின் மாநாடு நடைபெற்றதுடன், அதில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானம் குறித்த முழுப் பகுப்பாய்வு அறிக்கையையும் அரசாங்கப் பகுப்பாய்வாளரினால் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இச்செயன்முறையே தற்போதுவரைக்கும் நடைபெறுகிறது.

2004ஆம் ஆண்டில் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவைக் கொண்டாடியது.

2005ஆம் ஆண்டில் அரசாங்கப் பகுப்பாய்வாளர் பதவியானது பணிப்பாளர் நாயகத்தின் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டது. அதே சமயம், மேலதிக அரசாங்கப் பகுப்பாய்வாளர், பிரதி அரசாங்கப் பகுப்பாய்வாளர், சந்தேகத்திற்கிடமான ஆணவணங்களுக்கான அரசாங்கப் பரிசோதகர் முதலிய பதவிகளும் பகிரங்க சேவையில் பணிப்பாளர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டன.

செய்திகளும் நிகழ்வுகளும்