வெடிமருந்துகள் மற்றும் தீ புலனாய்வு

வெடிமருந்துகள் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள், வெடிப்புகள், வெடிமருந்துகளை உடைமை செய்தல், வெடிகுண்டுகளை உடைமை செய்தல், ஏனைய வெடி பொருட்களின் உபாயங்கள் முதலிய வெடிமருந்துகள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சான்றுகளைப் பரிசோதிப்பர். கைக்குண்டு, உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் மற்றும் உபாயங்கள் ஏனைய தீடீரென வெடிக்கும் வெடிபொருட்கள் போன்ற வெடிப்பொருட்களின் அகற்றப்படக்கூடிய ஆக்கக்கூறுகள் என்பனவும் இந்தப் பகுதியில் பரிசோதனை செய்யப்படும்.

வெடிமருந்துகள் மற்றும் தீ புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகள்

  • வெடிப்பின் தன்மையைத் தீர்மானிப்பதற்காக வெடிபொருட்களின் பருமனான வெடி பகுதிகளும் வெடிக்கச்செய்யும் தன்மையான நிரப்புப் பொருட்களும் இரசாயன ரீதியாக பரிசோதிக்கப்படும். சட்டநீதிமன்றம் / பொலிஸ் என்பவற்றினால் இத்தகைய பொருட்கள் முன்வைக்கப்படுமிடத்து பரிசோதனையின் பின்னர் ஒரு விஞ்ஞான அறிக்கையானது தொடர்புபட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரசபைகளுக்கு வழங்கப்படும்.
  • வெடிமருந்துகள் பிரிவிலுள்ள சட்ட விஞ்ஞான நிபுணர்கள் நடைபெற்று முடிந்த வெடிப்புகளின் விசேடமாக தீவிரவாத குண்டுவெடிப்புகளின் புலனாய்வுகளிலும் தமது சேவைகளை விஸ்தாரப்படுத்துவர். குற்றம் நடைபெற்ற இடத்தில் மேற்கொள்ளப்படும் புலனாய்வானது, சிதைவுற்ற வெடிகுண்டு, மற்றும் வெடிகுண்டின் விசையை உண்டாக்கும் சாத்தியமுள்ள தன்மை, பொறிநுட்பம், உபாயத்தின் வகை என்பவற்றை அடையாளங்காண்பதையும், வெடிப்பின் எஞ்சியுள்ள சிதைவுகளைப் பகுத்தாய்வதையும் உள்ளடக்கியுள்ளது.
  • இப்பிரிவின் அலுவலர்கள் கட்டிடங்கள், வாகனங்கள், போன்றவற்றில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான தீயின் தீ புலனாய்வுகளில் காவல்துறையினருக்கு உதவுவர். மேலும், எரிதலைத் தூண்டக்கூடிய காரணிகள் ஏதேனும் இருந்தனவாவென்பதைத் தீர்மானிப்பதற்காக, தீயின் மூல இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சிதைவுகளின் ஆய்வுகூட பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்.
  • தீக் காப்புறுதிப் பத்திரங்களுக்கு எதிராக உரிமைகோரும் மோசடிகள் மீதான புலனாய்வில் ஈடுபடும் காப்புறுதி நிறுவனங்கள்போன்ற அத்தகைய தனியார் அமைப்புகளுக்கு புலனாய்வு, மற்றும் வேறு ஆலோசனைச் சேவைகளை வழங்குதல்.
  • சட்ட நீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகர்தல்.
  • நீதிசார் வைத்திய அலுவலர்கள், பொலிஸ் அலுவலர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏனைய அதிகாரசபைகளுக்கு விரிவுரைகளை நடாத்துதல்.

செய்திகளும் நிகழ்வுகளும்